இந்திய அணி காலிறுதியில் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடரில்….
சென்னையில் உலக ஸ்குவாஷ் கோப்பை தொடரின் 5வது சீசன் தொடர்ந்து மூன்றாவது முறையாக (2011, 2023, 2025) நடக்கிறது . இந்தியா, ஹாங்காங், 2 முறை சாம்பியன் ஆன எகிப்து உட்பட 12 அணிகள், 4 பிரிவுகளாக பங்கேற்கின்றன.
சுவிட்சர்லாந்து, பிரேசில் அணிகளுடன் இந்திய அணி, 'பி' பிரிவில் இடம் பெற்றது.முதல் போட்டியில் சுவிட்சர்லாந்தை வென்ற இந்தியா, நேற்று தனது இரண்டாவதுபோட்டியில் பிரேசிலை எதிர்கொண்டு, இந்தியாவின் அனாஹத் சிங் 17, பிரேசிலின் லாரா டா சில்வாவை 3-0 (7-4, 7-0, 7-2) என வென்றனர்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அபே சிங், டியகோ கோப்பையை 3-0 (7-3, 7-1, 7-1) என ,முடிவில் இந்திய அணி 4-0 என வென்றது.
0
Leave a Reply